பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4. பிறர் வாய் நுண் பொருள் காண்ப தறிவு என்று. குறட்பா முடிகிறது. நாம் பேசுதல்-பிறர் சொல்லக் கேட்டல் என்கின்ற இரண்டும் இன்றியமையாத மனிதப் பண்பாடுகளாகும். உலகப் பழக்கத்தில் பலர் மற்றவர் கள் கூறுவதைக் கேட்டுப் பழகும் பழக்கம் இல்லாதவர் களாகிவிட்டார்கள் . - இது அறிவுடைமையாகாது. நாம் பேசுவது மற்றவர்களுக்கு மிகவும் எளிமையாக விளங்க வேண்டுமே என்ற முறை அறியாமல் பேசுபவர்களும் இருக்கின்றார்கள். இதுவும் அறிவுடைமையாகாது. இந்த இரண்டு பண்பாடுகளும் மிகவும் சிறந்தவை. என்பது ஆசிரியரின் கருத்தாகும்; எண் பொருளவாகச் செலச் சொல்லி தான்பிறர்வாய் நுண் பொருள் காண்ப தறிவு என்பது குறட்பாவாகும். அறிவுடைய மக்களின் செயல்களெல்லாம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்பது தெளிவாயிற்று. நுண் பொருள்களை அறிவுடையவர்கள்தான் புரிந்து கொள்வார்கள். புல்லறிவாளர்களோ எ ைத யுமே கேட்டறிய மாட்டார்கள். அந்த எண்ணமும் அவர் களிடம் இருக்காது. - - இறைவன் அறிவன் உலகமே அறிவிற் சிறந்தவர்களிடம் அமைக் துள்ளது என்று கூறுவது மிகையாகாது. இறைவனை யும் அறிவுப் பொருளாகவே, அறிவின் தன்மையாகவே அமைத்துப் பேசுகின்ற கருத்தும் அறிவின் முதன்மை யினை உணர்த்துவதாகும். அறிவுள்ள மக்கள் எத்தகைய செயல்களைச் செய்வார்க்ளென்று ஒவ்வொன்