பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 றாகப் பிரித்துக் கூறுதல் இயலாததாகும். பொதுத் தன்மையில் வைத்தே வி ளக் கி க் கொள்ளுதல் வேண்டும். அறிவின் பெருஞ்சிறப்பு அதிர்ச்சி தரக்கூடிய துன்பங்கள் அறிவுள்ளவர் களுக்கு வராது. எதிர்பாராத முறையில் திடும் என்று ஏற்படக்கூடிய துன்பங்கள் அதிர்ச்சியினைத் தரும் என்று கூறுதல் உலகப் பழக்கம். இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களின் நிலை யினையும் அறிவுடையவர்கள் நன்கு அறிந்து செயற் படுவார்கள்; எதிர்காலத்தினையும் நன்கு அறிந்து அதன்படியே கடந்து கொள்ளுகின்ற ஆற்றல் அறி. வுடையவர்களுக்கே உண்டு. இன்னும் உலக மக்களில் பலர் அறிவு நுட்பத்தை உணராதவர்களாகவே இருக்கின்றனர். மிக மிக நுட்பமானது அறிவாகும்; ஆழ்ந்து, அளந்து அளவிட முடியாதது அறிவாகும்; சிந்திக்க உள்ளத்தில் புதுமை களைத் தோற்றுவிப்பது அறிவாகும். அறிவுள்ள மக்கள் இல்லாத காட்டில் ஆட்சியும் நிலைக்காது. இவ்வாறு பல படிகளில் சொல்லவேண்டிய அருமை கிறைந்தது ஆகும். அந்த அறிவின், மனித ஆற்றலின் ஒரு செயலாகக் கூறப்படுவது பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்வதாகும். - இச்செயல் அறிவுடையோர்களாலேயே ஆவதாகும்.' நுட்ப அறிவு எதிர்காலத்தினை அறியச் செய்யும்: எதிர்காலத்தினை அறிய முடியாதவர்களே அதிர்ச்சி' தரும் துன்பங்களுக்கு இரையாகிவிடுவார்கள்.