பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வருவதோர் நோய்' என்பது குறட்பாவாகும்; கல்லா முறையில் அமைந்துள்ள வாழ்க்கையும் அதிர்ச்சி தரக் கூடிய துன்பங்களினால் சிதைந்து விடுவதைக் காண்கிறோம். - .. * * - பொதுப்பட துன்பங்கள் வாழ்க்கையைச் சிதைக் கும் என்பது உண்மையே என்றாலும் எதிர்பாராமல் திடும் என்று வருகினற துன்பங்களே மிகக் கொடி யவை என்பது புலனாயிற்று. ஆதலால் இத்தகைய காலங்களில் அறிவுதான் துணையாக நின்று: காப்பாற்றுதல் வேண்டும். - மனிதவாழ்க்கையில் வருமுன்னர்க் காத்துக்கொள் ளுதல் என்பது மிகமிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தொன்றாகும்; வந்த பிறகு காப்பாற்றிக் கொள்ளுதல் எளிதானதல்ல, இயலாமலும் போய்விடுமென்று கூறுதல் மிகையாகாது. - - - ஆகையினால் துன்பம் வருவதற்கு முன்பே, அதாவது குற்றம் தன்னைத் தாக்க வருவதற்கு .ام முன்பே காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு, துன்பம் வருவதற்கு முன்னே காப்பாற்றிக் கொள்ளாத வன் வாழ்க்கை அழிந்துவிடும் என்றும் கூறலாம். துன்பம் என்பது குறிப்பிட்டதொரு செயலை வைத்துப் புரிந்து கொள்ள முடியாததாகும்; அது பலதிறப்படும். குற்றங்கள் என்று கூறப்படுகின்ற குறைபாடுக ளெல்லாம் துன்பத்தினையே தருவதாகும். ஆகை யினால் வாழ்க்கையினையே அழித்துவிடுகின்ற துன்பங்களும் உண்டு. அத்தகைய துன்பங்கள் வரும். என்று பலர் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அறிவுள் ளவர்கள், குற்றம் குறைகள் எனப்படுகின்ற துன்பம் ---