பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வந்தபின் பார்த்துக்கொள்வோம் என்று இருக்க மாட்டார்கள். வருமுன்னர்க்காவாதான் அறிவில்லாதவனாகவே கருதப்படுவான்; அப்படிப்பட்டவன் வாழ்க்கை எந்த நேரத்திலும் தீமைக்குள்ளாக நேரிடும். கொடிய துன்பம் வந்த பிறகு அதனைத் தடுத்தல் பல கேரங் களில் முடியாததாகவே இருக்கும்; ஆதலால்தான் கொடிய குற்றமான துன்பம் வருவதற்கு முன்னேயே அறிவாளிகள் காத்துக் கொள்வார்கள். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை கல்லதொரு உதாரணத்தினால் விளக்கப்படுகிறது. - - நெருப்பும் வைக்கோலும் பார்ப்பதற்கு வைக்கோல் குவியல் பெரிதாகத்தான் காணப்படுகின்றது. அந்தக் குவியல் அமைக்கப்பட் டிருக்கும் முறை தனிப்பட்ட தன்மையுடையதாய் இருக்கும்; வைக்கோல் குவியலை வைத்துறு என்று கூறுவர். அவ்வளவு பெரிய வைக்கோல் குவியல் சிறு கெருப்பினால் இருக்கும், இடம் தெரியாது அழிந்து விடும். - நெருப்பு பட்டவுடனேயே வைக்கோல் தீயினை விரைவில் பரவச் செய்யும்; அக்குவியலினுள் நெருப்பு எவ்வாறு விரைந்து பரவுகிறது என்பதைக் கண்டு கொள்ளுதலும் அரிதாகும்; வைக்கோல் குவியலின் உட் புறத்தில் நெருப்புச் சென்றுவிடும் என்பது இயல்பாகும்: வெளிப்புறத்தில் தண்ணிர் ஊற்றினாலும் அது உட் புறத்தில் பரவுகின்ற நெருப்பினை அணைத்தல்