பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 இவ்வாறு வைக்கோல் குவியலினையும் கெருப் பினையும் சேர்த்து வைத்துப் பலதரப்பட்ட உண்மை களை நாம் அறிந்துகொள்ளலாம். மிகப் பெரியதாகக் காட்சியளித்த வைக்கோல் குவியல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். - - இச்செயலினை நெருப்பு செய்துவிடுகிறது; சிறிய கெருப்பு மிகப் பெரிய குவியலை அழிக்கும் என்பதே குறிப்பாகத் தெரிக் துகொள்ள வேண்டியசெய்தியாகும். ஆதலால் குற்றம் வருவதற்கு முன்பே காத்துக் கொள்ளுகின்ற அறிவினை, ஆற்றலினைப் பெற் றிருக்க வேண்டும்; வந்தபின் காத்துக் கொள்வோம் என்றிருத்தல் கூடாது. - பெரிய வாழ்க்கையும் சிறிய குற்றத்தினால் அழிந்து விடுமாம்; ஆதலால் துன்பம் வருவதற்கு முன்பே காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை கனரி என்று கூறப்படுகின்ற கெருப்பு பட்டவுடனேயே அழிந்து சாம்பலாகின்ற வைக்கோல் குவியலைப் போன்றதாகும்; இவ்வுண்மையினை வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக் கெடும்’ என்ற குறட்பா கூறுகின்றது. இன்ப மும் துன்பமும் இயல்பேயாகும் வாழ்க்கையில் துன்பங்கள் வராமலேயே இருக்க வேண்டும் என்று எண்ணுதல் அறிவுடைமையாகாது; இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இயல்பான தன்மைகளாகும். ஒருவன் தன்னுடைய மனத்தினை அமைத்துக் கொள்ளுகின்ற நிலையின் வழியே இன்ப துன்பங்களும் அமைந்து விடுகின்றன. * . . o