பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இன்ப துன்பங்கள் மனத்தின் வலிமையினையும் வலிமையற்ற நிலைமையினையும் பொறுத்திருக்கிறது. சிறப்பாகத் துன்பத்திற்குக் காரணம் மனோநிலைகள் என்பதனைக் குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும். வருகின்ற துன்பம் மிகச் சிறிதாக இருந்தாலும் அறிவில்லாதவன் அதனைப் பெரிதாக கினைத்துத் துன்புறுகின்றான்; அறிவுள்ளவன் தன்னுடைய அறிவுத் திறத்தினால் அத்துன்பத்தினை வெல்லு கின்றான். உள்ளம் என்று கூறப்படுகின்ற மனம் கினைக்கின்ற ஆற்றல் பெற்றது. எண்ணுதல், கினைத்தல், சிந்தித்தல் என்ப தெல்லாம் மனிதப் பிறவிக்கென்றே உள்ள அருமை யான பண்பாடுகளாகும். மற்ற பிறவிகளுக்கு இந்த் அரிய ஆற்றல் கிடையாது. மனிதனைக் கட்டுப்படுத்தி நல்ல முறையில் கடக்கச் செய்வது அறிவேயாகும்; ஆதலால் அறிவு மேன்மையான இடத்தில் வைத்துக் கருதப்படுகிறது. & - - துன்பத்தினை இடும்பை என்று ஆசிரியர் கூறுவர்; இடும்பை என்பது மக்கள் எல்லோருக்கும். ஒவ்வொரு காலத்தில் வந்து போவதேயாகும். இடும்பை அளந்தறிந்து கூறமுடியாத ஒன்றாகும்; காலத்தினால் அறிய முடியாததாகும். இடும்பை உண்டாகின்ற காலமும் அறிய முடியாததாகும்; அதுபோலவே இடும்பையின் அளவும் அளவிட முடியாததாகும். இத்தகைய இடும்பைகள் அறிவில்லாதவனுடைய வாழ்க்கையைப் பெரிதும் குலைத்துவிடும்; பலர் வாழ்க் கையினை அழித்துவிடும். ஆதலால் இடும்பைகளுக்கு. இர்ையாகாமல் காத்துக் கொள்ளுதல் மிகவும் சிறந்த