பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1. ஆற்றலும் பண்புமாகும். இடும்பைகளைச் சிறிதாக்கி அவைகளுக்கு அஞ்சாமல் கிலைத்து கிற்க வைப்பது ஒருவனுடைய அறிவேயாகும். - . - அறிஞன் உள்ளம் அதிர்ச்சி அடையாது அறிவுடைய ஒருவன் தன் உள்ளத்தில் தோன்று கின்ற, துன்ப எண்ணங்களைப் பெரிதாக்கமாட்ட்ான்; அவைகளை மிகச் சிறிதாகவே கினைப்டான். அவ்வாறு நினைப்பது அறிவின் வன்மையைப் பொறுத்திருக், கிறது. ஆதலால் அறிவு கிறைந்த ஒருவனுக்கே உள்ளம் என்கிற மனம் அடங்கி நிற்பதாகும். கரை புரண்டு ஓடுகின்ற வெள்ளத்தினைப்போல இடும்பைகள் வருவதும் உண்டு. இடும்பைகள் என்று குறிப்பிடும்பொழுது கடுமையான துன்பங்களெல்லாம் அதனுள் அடங்கும். வெள்ளம் என்பது திடீரென்று வருவதும் உண்டு, அளந்து கணக்கிட முடியாத முறை. யில் வெள்ளம் பெருகி வருதல் உண்டு. . . தணியாத வெள்ளமாக மிகுந்து வருதலும் உண்டு. வெள்ளம் வருகின்றபோது அது தணிந்துவிடும் காலத்தினை உணர்தலும் முடியாது. இவ்வாறாக நீர்ப் பெருக்கான வெள்ளத்தினைப் பல நிலைகளில் வைத்துப் பேசுவார்கள். . - ஆசிரியர் இந்த வெள்ளத்திற்கே இடும்பைகளை ஒப்பிட்டுக் காட்டுகின்றார். இடும்பைகளைக் கண்டு அஞ்சுதல் கூடாது. மயங்குதல் கூடாது. அளவிட முடியாத, இடும்பைகளும் ஏற்படக்கூடும். மனம் தளர்ந்து, உண்ர்ச்சி குன்றி, நிலை தடுமாறு கின்ற மாறுதலும் ஏற்படக்கூடும். ஆனால் இப்படிப் வ.-2 -