பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பட்ட நிலைமைகள் எல்லாம் அறிவுடையவர்களைக் கெடுக்காது என்று ஆசிரியர் கூறுகின்றார். துன்பங்கள் வந்தபோது அறிவுத்திறன் பெற்ற வர்கள் உள்ளத்தில் ஒன்றினை நினைப்பார்கள். அந்த கினைப்பு உறுதியாக இருக்கும். அப்படி கினைப்பது வருகின்ற துன்பத்தினைப் போக்குகின்ற எண்ணமாக இருக்கும். ஆதலால் இடும்பைகள் அழிந்து கெடும். ஒரு குறட்பா வெள்ளத்தனைய இடும்பை என்று ஆரம் பித்து அறிவுடையார் உள்ளத்தின் உள்ளக் கெடும்’ என்று முடிகிறது. இடும்பை என்பது துன்பமே யாகும் இடும்பை வந்தால் அந்த இடும்பைக்கு உள்ளத் தினைப் பறிகொடுத்தல் கூடாது. அறிவுடையவர்கள் உள்ளத்தினை, அதாவது மனத்தினை வன்மையாக வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட இடும்பை வந்துவிட்டதே, இதனை நீக்கவேண்டுமே என்று நினைத்துப் பார்த்தவுடனேயே வந்த துன்பங்கள் எல்லாம் கெட்டொழிந்து விடும் என்கின்ற உண்மையினை உள்ளத்தின் உள்ளக்கெடும்’ என்ற குறளடிச் சொற்கள் மெய்ப்பிக்கின்றன. - - - அறிவுடையவர்களை எத்தகைய அரிய இடத்தில் அமைத்துக் காட்டுகின்றார்.ஆசிரியர் என்கின்ற சிறப்பு சிந்திக்கத் தக்கதாகும். இடும்பை என்கிற கொடிய பகைவனைத் தோற்கடித்து வெற்றி கானும் வீரனாக அமைந்துள்ளது அறிவேயாகும்.