பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 துன்பத்திற்குக் காரணம் மனப்பக்குவம் அடை எயாமையே என்பது அறியக்கிடக்கின்றது. உள்ளம் என்று குறிப்பிடுகின்ற பொழுது அறிவுடையவன் உள்ளம், அறிவில்லாதவன் உள்ளம் என்று பிரித்துப் பார்த்தல் முறையாகும். அறிவுடையான் உள்ளம் கினைத்துப் பார்த்தவுடனேயே துன்பங்கள் எல்லாம் கெட்டுவிடும். இடும்பை,என்பதை அறிவுடையவன் இன்பமாகவே கருதுவானே தவிர அவ்விடும்பைக்காகத் தன்னை வருத்திக் கொள்ளமாட்டான் என்பதும் நுட்பமாக உணர்த்தப்பட்டது. ஏனென்றால் இன்பமும் துன்பமும் மனோ நிலைகள் என்பது உலக வழக்காகும். இடும்பைகள் இல்லையென்றால் மனித வாழ்க்கை இன்பத்திலேயே வளர்வதாகும். வருகின்ற இடும்பை களையும் இன்பமாகவே கண்டு அதை நீக்கும் அறிவுடையவர்கள் என்றும் இன்பமாகவே வாழ்வர் என்பது வெளிப்படையான உண்மையாகும். இடும்பைகள் இயல்பாகவே வருவதும் உண்டு. கல்வி கேள்விகளில் சிறந்தவர்களும் அறிவு நிறையப் பெற்றவர்களும் இயற்கையாக வருகின்ற துன்பங் களுக்கு ஆளாக நேரிடும். எத்தகைய ஆற்றலும் அறிவும் பெற்றிருந்தாலும் இயல்பாக வருகின்ற இடும்பைகள் வந்தே தீரும். - ஆதலால் அத்தகைய இடும்பைகள் வருகின்ற பொழுது அறிவு நிறைந்தவர்கள் அதனைத் தடுத்து: குறைக்க முயன்று கலக்கமடையாமல் இன்பம் அடைவார்களென்பது குறிப்பிடத் தக்கதாகும்.