பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மனித உள்ளத்திற்கு மிகுந்த ஆற்றலும் சிறப்பும் உண்டு. உள்ளம் மனம்’ என்று கூறப்படுவது மனிதப் பிறவிக்கே உண்டு. மற்ற குறைந்த அறிவு பெற்ற பிறவிகளுக்குக் கிடையாது. உள்ளம்" என்பதற்கு ஊக்கம்’என்பது சிறப்பான அர்த்தமாகும். ஏனெனில் மன எழுச்சி என்பது மக்களுக்கென்றே அமைந்துள்ள சிறந்த குணமாகும். உணர்ச்சி என்றும், மன எழுச்சி என்றும் :ஊக்கம்’ எ ன் று ம் சொல்லப்படுபவைகளெல்லாம் மனிதர்களுக்கே இருக்கவேண்டிய உயர்ந்த பண்பாடு களாகையால் உள்ளம்’ என்பதற்கும் ஊக்கம்’ என்றே. பொருளமைத்தனர். - ஊக்கம் எனப்படும் உள்ளமே சிறப்பு

ஊக்கம்’ என்பது உள்ளத்துடன் இரண்டறக் கலந்திருக்க வேண்டிய சிறப்பாகும். ஊக்கமில்லாத வர்கள் உள்ளம் உடையவர்கள் என்று கூறுவது .ெ பா ரு ந் த து என்பதே குறிப்பு. ஆதலால், ஊக்கத்தினை முதன்மையாக வைத்துத்தான் உள்ளத் தினைப் பேசுதல் வேண்டும். -

ஊக்கமில்லாதவர்களுக்கு முயற்சி இருக்காது. முயற்சி இல்லையென்றால் மனிதத் தன்மை குறை பட்டதாகிவிடும். ஆதலால்தான் உள்ளமும் ஊக்கமும் ஒன்றென்றே பேசப்பட்டது. - ஊக்கம் என்கிற உயர்ந்த குணத்தினை உள்ளம் என்றே ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பிடுவார். ஊக்க முடையவர்கள் மேலோங்கிச் செல்வார்கள். தம்மைத் தாமே மதித்துப் பெருமையுடன் வாழ்வார்கள். எல்லா வகையான செல்வமும் தங்களுக்குத்தாமே வந்துசேரும்.