பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 . ஆதலால் ஊக்கம் என்று கூறப்படுகின்ற உள்ள முடையவர்கள் பொருள், கொடையளித்தல், மதிப்புடன் வாழ்தல் முதலிய சிறப்புடன் இருப்பார்கள். ஊக்கமில்லாதவர்களுக்கு ஒன்றுமே சிறப்பாகக் கூறிக்கொள்ள இருக்காது. எந்த விதமான சிறப்பினை யும் அவர்கள் அடையமுடியாது. உள்ளம் இலாதவர் எய்தார்’ என்று குறட்பா ஆரம்பமாகிறது. . . . . உள்ளம்’ என்கின்ற ஊக்கமில்லாதவர்கள் அடைய முடியாது என்கின்ற குறிப்பு கூறப்பட்டது. மனிதப் பிறவிக்கு இருக்க வேண்டிய இயல்பான பண்பு களில் ஒன்று தம்மைத்தாமே மதித்தல் என்பதாகும். ஊக்கம் உள்ளவர்கள் இத்தகைய நன்மதிப்பினைப் பெற்றிருப்பார்கள். செருக்கு எனப்படும் மதிப்பு - தற்பெருமை என்கிற குற்றச்சாட்டில் இக்கருத்து வராது. ஊக்கம் மனிதனுக்குக் கொடுக்கிற பரிசு தன்னைத்தானே மதித்தல் என்பதாகும். இதனைச் செருக்கு என்று திருவள்ளுவர் கூறுவர். - செருக்கு என்கிற சொல் மதிப்பு என்ற பொருளில் கூறப்படுவதாகும். எனவேதான் ஊக்கமுள்ளவர்கள் தம்மைத்தாமே மதிக்கின்ற செருக்கினைப் பெறுகின்ற உரிமையுடையவர்களாவர்கள். அந்தச் செருக்கும் தக்க காரணங்களினால் உண்டாவதாகும். ஊக்கமுள்ளவன் கிறையப் பொருளிட்டுவான்; மற்றவர்களுக்கு ஈகை' கொடை என்கிற நற்பணிகளையும் செய்து பெருமை படைவான. . . . . . ஊக்கத்தினால் வெற்றி கிடைப்பது எளிதாகவும் முடியும். இத்தகைய செருக்கினைப் பெற்ற அவன்