பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தன்னைத்தானே மதிக்கும் செருக்கினைக் கொண் டிருத்தல் இயல்பேயன்றோ? - - பிறர்க்குப் பயன்படுகின்ற அவன் தானும் இன்ப மடைகின்றான், மற்றவர்களையும் இன்பமடையச் செய்கிறான். வள்ளல் தன்மை என்று கூறுவது உலகியல் கருத்தாகும். இதனையே வண்மை என்று: சொல்வது உண்டு. வள்ளல் தன்மை வண்மை’ என்கின்ற சிறப்பு ஊக்கமுடையவர் களுக்கே இருப்பதாகும்; உள்ளம் என்கின்ற இந்த ஊக்கமில்லாதவர்கள் வள்ளல் தன்மை’ என்கின்ற செருக்கினை, கன்ம்திப்பினை அடைய முடியாது: எனவே உள்ளமில்லாதவர் எய்தார்’ என்று தொடங்கப் பெற்ற குறட்பா உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு’ என்று முடிகிறது. உலகத்தில் வள்ளியம் என்று கூறிக் கொள்ளக் கூடிய செருக்கினை உள்ளமில்லாதவர்கள் அடைய முடியாது; ஊக்கம் என்பது உள்ளம் என்கின்ற: சொல்லினால் சிறப்பிக்கப்பட்டது. உள்ளமிலாதவர் எய்தார் உலகத்து-வள்ளியம் என்னுஞ் செருக்கு" என்ற குறட்பா பன்முறையும் சிந்திக்கத் தக்கதாகும். ஊக்கம் இல்லாமை என்பதும் உணர்ச்சியுள்ள மனிதத் தன்மைக்கு மிகவும் குறை உண்டாக்குவ தாகும். ஊக்கமுள்ளவர்கள் முயற்சியுடையவர் களாவார்கள், பொருளிட்டுவார்கள், சேர்த்துவைப் பார்கள், கொடையளிப்பார்கள், அதனால் வண்மை’ என்கின்ற செருக்கினையும் கன்முறையில் கொள்ளு. வார்கள். இவைகளெல்லாம் உள்ளமில்லாதவர்களால் பெறவேமுடியாது.