பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஊக்கமுடையவர்கள் தளர்ச்சி என்பதைப் பெற. மாட்டார்கள். அரிய காரியமென்று அயர்ந்துவிட மாட்டார்கள். ஏன்ெ னில் ஊக்கம் என்பதற்கு அத்தகைய ஆற்றல் உண்டு. - ஊக்கம் சிறிதாக இருந்தாலும் பெரிய செயல்களை அஃது செய்து முடிக்கும். யானையையும் புலியையும் செயல் முறையில் வைத்துப் பார்க்கின்ற பொழுது ஊக்கத்தின் சிறப்பு நன்கு புலப்படுகின்றது. யானையும், புலியும் வலிமை மிகுந்திருந்தாலும் ஊக்கம் இல்லையென் றால் பெரிய வலிமையும் பலனற்றதாகிவிடும். எனவே தான் ஊக்கம், ஊக்கமில்லாத பெரிய வலிமையினையும் வெல்லும் என்பதாயிற்று. யானையின் உருவம் எல்லா விலங்குகளையும் விடப் பெரிது. யானையின் உடம்பு மிகப் பெரிய தோற்றத்தைக் கொண்டது. காணுகின்ற பலரும் அஞ்சக்கூடிய பெரிய தோற்றத்தை அந்த யானை பெற்றுள்ளது. - பெரிய உடம்பால் வலிமையும் மிகுந்திருக்கிறது. அவையல்லாமல் யானை கூர்மையான கொம்பு களையும் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெருமைக்குரிய யானையானது ஊக்கமில்லாமல் இருக்கின்றது. ஆதலால் சிறிய உருவம் கொண்ட புலியானது தாக்கு கின்றபொழுது யானை அஞ்சுகின்றது. - - புலியின் உருவம் சிறிதேயாயினும் அதன் வலிமை யும் யானையினை ஒப்பிடும்பொழுது, குறைந்ததேயா