பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 யினும் ஊக்கம் மிகுந்திருக்கின்றது. சிறிய உடம்பில் பெரிய ஊக்கத்தினை அப்புலி பெற்றிருக்கின்றது. ஆதலால்தான் யானையினையும் தாக்கக்கூடிய மன எழுச்சி அப்புலிக்கு ஏற்படுகின்றது. யானையினை யும் தாக்குகின்றது. யானை வெரூஉம் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். யானையானது அஞ்சி ஒடும் என்பதே இதற்குப் பொருளாகும். அந்த யானை எப்பொழுது அஞ்சி ஒடும் என்பதற்கு விடை கூறவந்த ஆசிரியர் புலி தாக்குறின் என்று குறட்பாவை முடிக்கின்றார். புலி தாக்குவதற்குக் காரணம் அதனுடைய ஊக்கமேயாகும். ஊக்கமுடைய வர்கள் எதிர்த்து வருகின்ற பகையினைக் கண்டு மலைக்கமாட்டார்கள் என்பது குறிப்பு. - பெரிய உடம்பு 'ல் யானையின் உடம்பு பரியது ஆகும். அதாவது பெரிய உடம்பை உடையது. அத்துடன் கூர்மையான கோடுகளை உடையதாகும்; அதாவது கூர்மையான கொம்புகளைப் பெற்றிருக்கின்றது. பெரியது கூர்ங் கோட்டது என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பா -யானை வெரூஉம் புலிதாக்குறின் என்று முடிகின்றது. யானைக்குப் பெருமை அதன் உடம்பும் கூரிய கொம்புகளும் மிகுந்த வலிமையுமாகும். புலியின் பெருமை அதற்குள்ள மன எழுச்சியான ஊக்கமேயாகும். ஊக்கமில்லாதவர்கள் வேறு பல சிறப்புகளைப் பெற் றிருந்தாலும் அவைகள் பயனில்லாமலே முடியும், தோற்றம் அல்லது உருவம் என்பது மட்டும் பயன் தராது. மக்கள் உள்ளம் புலியின் உள்ளத்தைப்போல் ஊக்கம் கிறைந்திருக்க வேண்டும். -