பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 விரைந்து செல்லுவதும் பாய்ந்து செல்லுவதும் புலியின் குணங்கள் என்பதை உலகம் அறியும். இவை களுக்கு அடிப்படை அச்சம் என்பதே இல்லாததுதான். அச்சம் என்கின்ற திய குணம் ஊக்கம் என்பதனை மங்கிப் போகச் செய்யும். என்றும் நிலைத்து கின்று உணர்ச்சியினையும் எழுச்சியினையும் தரக் கூடிய உறுதியான கருவி ஊக்கமேயாகும். பெரிய உருவத் தினையும் தோற்றத்தினையும் கண்டு மயங்குதல் அறி :வுடைமையாகாது. . . . ; புலித்தோல் போர்த்தி மேய்ந்த பசு பெரிய உருவம் அல்லது தோற்றம் என்பதனைக் கொண்டு உலகத்தில் ஏமாற்றித் திரிபவர்கள் பலருண்டு. பார்ப்பதற்கு வேடம் தாங்கிப் பெரும் தோற்றத்தினைக் காட்டிக் கொண்டு வாழ்கின்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் வஞ்சனையும் * கள்ளத்தனமும் கொண்டவர்களாவார்கள். உள்ளம் என்று கூறக்கூடிய மனத்தினிடம் தீய பண்புகளை வைத்துக்கொண்டு மக்களை ஏய்ப்பதற்கு வேடம் தாங்கித் திரிபவர்களையே குறிப்பிட்டுப் பாக்கவேண்டும். அவர்களை நம்புதல் கூடாது. இவ்வாறு பொய் வேடம் தாங்கி, மக்களை மயக்கி வஞ்சித்து வாழ்பவர்கள், தவசிகள் போல அல்லது துறவிகள் போலத் திரிகின்றார்கள். மனம் துரய்மை யாகவும் தவத்தன்மையும் பெற்றிருக்காதவர்கள் வேடத்தை மட்டும் தாங்கிக்கொண்டு காட்சியளிப்பது அவர்களுக்கே தீங்கினை உண்டாக்குவதாகும். ஒழுக்கங் கெட்ட முறையில் இப்படிப்பட்ட வேடதாரிகளின் கடை முறைகள் இருக்கும்.