பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இப்படிப்பட்டவர்களுக்கு மன வலிமை இருககாது, உள்ளத் துாய்மை இருக்காது. அவர்கள் காட்டிக் கொள்ளுகின்ற தோற்றம் அவர்களைக் காப்பாற்றும் என்று எண்ணுகின்றார்கள். அதனால் தீய செயல் களைச் செய்வதற்குத் துணிகின்றார்கள். அச்சம் போகாது ஒரு பசுவானது புல் தின் னுவதற்குச் செல்கின்றது. மனம் போன வழியில் அது மேயச் செல்கினறது. பிறருக்குரிய இடத்தில் புல்லை மேய்வதற்குச் செல் கின்ற அப்பசு இயல்பாகவே அச்சம் கொணடிருக் கிறதாம் அதற்காக அது புலியின் தோலைப் போர்த்தி கொண்டதாம்! பார்ப்பவர்கள் புலியென்று கினைத்துக் அஞ்சி ஓடிவிடுவார்கள் என்று அப்பசு கினைக்குமே பானால் அது என ன பேதைமை? பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது என்பது அப்பசுவுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அது. செய்கின்ற வேலை வஞ்சனையும் கள்ளத்தனமும் நிறைந்ததாகும். புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட காரணத்தினாலே. அப்பசுவுக்குப் புலியின் வன்மை வந்துவிடுதல் கைகூடாதல்லவா? இவ்வாறே வஞ்சகர்கள் பலர் தீய ஒழுக்கத்தில் கடந்து கொள்வதற்குத் தவவேடம் தாங்கித் திரிகின் றனர். தவசிகள் மனோவலிமை பெற்றவர்கள், மனத் து.ாய்மை கொண்டவர்கள், ஒழுக்கத்தில் மேம்பட்ட வர்கள், ஒழுக்கமே உருவானவர்கள். அப்படியிருக்க இவர்கள் போன்ற வல்லுருவத் தினை வஞ்சகர்களும் தாங்கிக் கொள்கிறார்கள். வேல்