பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 i. உருவம்’ என்பது தவ வலிமை கொண்ட உண்மைத் - துறவிகள் பெற்றிருக்கும் தோற்றமாகும். புலித்தோலைப் போர்த்திக் கொள்ளுகின்ற பசு வினைப் போல வஞ்சனைச் செயலைச் செய்கின்ற ஒழுக்கங்கெட்ட கள்ளர்கள் தவசிகளின் வேடத்தினைத் தாங்கித் திரிகின்றனர். - தீய ஒழுக்கத்தினர் . அப்படித் தாங்கிக் கொண்டால் அவர்கள் செய் கின்ற தீய ஒழுக்கச் செயல்கள் பிறரால் கண்டு கொள்ள முடியாமல் போகும் என்று எண்ணுகின்றனர். பெற்றம்’ என்கின்ற சொல் பசு என்பதைக் குறிக்கும். பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று' என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். புலியினுடைய வலிமை, மனநிலை பசுவிற்கு எள்ளளவும் கிடையாது. அப்படியிருக்க புலியின் தோலை அப்பசு போர்த்திக். கொண்டது மடமையினும் மடமையாகும். அத்துடன் பிற இடத்தில் போய் மேய்வது அடாத செயலாகும், பொருத்தமற்றதாகும். இத்துடன்,உலகப் பழக்கத்திற்கே மாறுபட்டு புலி புல்லைத் தின்னும் என்பதாகக் க்ாட்டுகின்ற அப்பசுவின் செயல் மேலும் வியப்பிற்குரியதாகும். கள்ளத்தனம் நிறைந்த மனம் உடையவர்கள் மனம் போன போக்கிலெல்லாம் கடந்து தீய ஒழுக்கத் தினைச் செய்வார்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டு. மனத்தில், உண்மையான தவசிகள் தாங்கும் வலிமையில்லாதவனை வலியில் நிலைமையான்' என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆனால் அவனோ உண்மைத் துறவிகள்போலத் தோற்றமளிக்கிறான்.