பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அதாவது, வல்லுருவம் தாங்கிக்கொண்டு திரி கின்றான். இவனைத்தான் இவ்வாறு புல்லைத் தின் னும்புலித்தோல் போர்த்தபசுஎன்று கூறுகின்றார். . வலியில் கிலைமையான் வல்லுருவம் பெற்றம்-புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று என்று சொல்லப்படு கின்ற குறட்பா அனைத்தையும் வெளிப்படுத்திற்று. மயங்குதல் கூடாது உலக மக்கள் விழிப்புடனே வாழ்தல் வேண்டும் என்பது சிறந்ததொரு உண்மையாகும். மக்களிடையே தீய ஒழுக்கத்தினர் மலிந்திருப்பர் என்பது புலனா யிற்று. தோற்றத்தினைக் கண்டு மயங்குதல் கூடாது என்கின்ற உண்மை புலப்படுத்தப்பட்டது. உலக மக்கள் தவ வேடத்தினைக் கண்ட மாத்திரத் திலேயே மயங்குதல் இயல்பு என்று கூறுவது:மிகை பாகாது. பிற வேடங்களைக் கண்டு மயங்கிவிடாத மக்கள் தவ வேடங்களைக் கண்டு மயங்குவார்கள் என்பது இயல்பேயாகும். ஆதலால்தான் குறிப்பாகக் கூறுகையில் தவ வேடத்தினை ஆசிரியர் எடுத்துக் கொண்டார். - உலகியல் நடைமுறையில் இது பெரிதும் சிந்திக்க வேண்டியதாகும். தவ வேடம் தாங்கியவர்களிடத்தில் பலரும் நெருங்கிப் பழகுவதற்கு விரும்புவார்கள்என்பது கடைமுறைப் பழக்கமாகும். . ஆண், பெண் இருபாலாரும் தவ வேடம் தாங்கிய வர்களிடம் தாமே செல்லுவார்கள் என்பதும் இயல் பேயாகும். எனவேதான் கொடுஞ்செயல் புரியும் வேட 'தாரிகள் மக்கள் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பது வற்புறுத்தப்பட்டது. -