பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மன எழுச்சியே திடமான அறிவு தோற்றம் என்கிற உருவமும் மனப்பண்பும் சம்பந்தமில்லாமல் இருக்கும்என்பதும் அறியப்பட்டது. மனத்தினிடம் கொண்டிருக்கின்ற மன எழுச்சிதான் ஒருவனுக்குத் திடமான அறிவு என்று கூறப்படும். நாள்தோறும் மன எழுச்சி மிகுந்து வருதல் வேண்டும். ஒருவனுக்குத் திண்மையான அறிவு இருக்கின்றது என்பதற்கு அடையாளம் அவன் மனத்தில் தோன்று கின்ற ஊக்கமேயாகும். அதாவது மனஎழுச்சியே ஆகும். மனம் என்பது மன எழுச்சிக்கு இருப்பிட மாகும். எழுச்சி என்பது வளர்ந்து வருவதாகும். - எழுச்சியுள்ள மனம்படைத்தவர்கள் சிறந்துவாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். வாழ்க்கையினை வளர்த்து வருவது மனத்தில் தோன்றி வளர்ச்சி பெறுகின்ற எழுச்சி மிகுந்து வருதலேயாகும். மிகுந்து வருகின்ற மன எழுச்சியைத்தான் ஊக்கம் என்று கூறுகின்றோம். உரம் என்பதே அறிவு உரம் என்று சொல்லப்படுவது திண்மையான அறிவேயாகும். உரம் பெற்றவர்கள் என்று குறிப்பிடு. வது எல்லாம் என்றென்றும் குறையாத ஊக்கமுள்ள மக்களைத்தான் என்பது அறிதல் வேண்டும். இந்த r ஊக்கத்தினையே திண்மையான அறிவு என்று: கூறுவர். * * - ஆறறிவு படைத்த மக்கள் என்பதற்கு குறிப்பான இலக்கணம்மன எழுச்சியேயாகும். மனஎழுச்சி என்பது: அளவிட்டு நின்றுவிடுவது அல்ல, அது மிகுந்தே வளர்ந்து வரும். ஆதலால்தான் திண்ணிய அறிவு படைத்தவர்கள் என்பவர்களை விளக்கிக் கூற வந்த