பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆசிரியர் ஊக்கம் மிகுந்திருப்பவர்களையே அவ்வாறு குறிப்பிட்டார். வெறுக்கை என்கிற சொல் எழுச்சியின் மிகுதியைக் குறிக்கும். அந்த மனஎழுச்சி உரம்என்பதைக் குறிக்கும். உரம் என்பது திண்ணிய அறிவு என்பதைக் காட்டும். ஆதலால்தான் ஒரு குறட்பா உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை என்று தொடங்குகின்றது. உள்ள வெறுக்கை’ என்பது மன எழுச்சி மிகுந் திருக்கும் தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மனிதப் பிறவியில் கல்லறிவும் செயலில் முயற்சியும் இயல்பாகவே இருத்தல் வேண்டும். நல்ல முயற்சியும் செயலாக்கும் தன்மையும் இல்லையென்றால் சிறப்பான மக்கட்பிறவி குற்றமுடையதாகும். குற்றமுடையது என்று கூறும்பொழுது தன்மை யில் அதாவது வாழ்வில் மனிதர்களாகக் கருதப்படக் கூடாதவர்கள் என்பதே பொருளாயிற்று. இத்தகைய ஆழ்ந்த உண்மையினை வற்புறுத்துவதற்குக் காரணம் மக்கட் பிறவிக்குக் கிடைத்திருக்கின்ற அருமையான மனப் பண்பேயாகும். - சிந்தனைக்கும் எழுச்சிக்கும் மனமே பிறப்பிடம் மனம் என்பது உள்ளம் என்றும் குறிக்கப்படும். உள்ளம் சிந்தனைக்குரிய இடம், அரிய சிந்தனை களைத் தரும், புத்தம் புதிய நிலைமைகளை உண்டாக் கும் ஆற்றல் படைத்தது உள்ளமேயாகும். ஆதலால்தான் மன எழுச்சி என்ற பொருள் கொண்ட வெறுக்கை என்கின்ற சொல்லினை உள்ள வெறுக்கை என்று இணைத்துக் கூறினார். அவ்வாறு உள்ள வெறுக்கையினைக் கொண்ட மக்களை மிகவும்