பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 . திண்மையான அறிவு படைத்தவர்களென்றும் குறிப் பிட்டார். - திண்மையான அறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளம் உள்ளத்தில் மன எழுச்சி எப்போதும் தோன்றிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பதாகும். உண்ர்ச்சி எழுச்சியாக வளர்ந்து ஊக்கமும் பெற்று வாழ்க்கையில் வெற்றியினைத் தேடித் தரும். மரம் என்று குறிப்பிட்டார் இவ்வாறான மன எழுச்சியினை வளர்க்காத மக்கள் அறிவில்லாதவர்களாவார்கள். அறிவில்லா தவர்கள் என்று குறிப்பிடுகிறபொழுது மக்கள் பிறப் பில் வைத்து எண்ணப்படவேண்டாதவர்களாவார்கள். அவர்களை இழிவாகக் கூற வந்த ஆசிரியர் மரம்' என்றே கூறிவிட்டார். ஓரறிவு உடையது மரமாகும். மரம் பிறந்த இடத் திலேயே வளர்ந்து மறையக் கூடியதாகும். மரத்திற்கு மனம் இல்லை, எழுச்சியில்லை, ஊக்கம் இல்லை, ஒரறி வுடைய இனமாகும். - அத்தகைய இனத்திற்கு உரமில்லாத, ஊக்கமில் லாத மன எழுச்சியில்லாத மக்களையும் ஆசிரியர் ஒப்பிட்டுக் காட்டினார். உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை என்று தொடங்கப்பெற்ற குறட்பாவை அஃதிலார் மரம்-மக்களாதலே வேறு என்று முடித்தார் ஆசிரியர். அஃது இல்லார்’ என்று கூறியதால் மன எழுச்சி யில்லாத மக்களாகும் என்பது விளக்கப்பட்டது. மரம் என்று கூறி நிறுத்தப்பட்டுவிடவில்லை. மரங்களிலும் சேர்க்கப்படாமல் தனிப்பட்டதொரு மரவகையினைச்