பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இழிதன்மை தெளிவாகின்றது. உரம் ஒருவர்க்குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம் மக்களாதலே வேறு’ என்று சொல்லப்பட்டுள்ள குறட்பா உரம்’ என்று சொல்லப்படுகின்ற திண்மையான அறிவு உள்ளத்தில் தோன்றக் கூடிய ஊக்கமேயாகும் என்று விளக்கிக் காட்டிற்று. i இக்குறட்பாவிலுள்ள வெறுக்கை மிகவும் சிந்: திக்க வேண்டிய ஒன்றாகும். இந்த உள்ள வெறுக்கை” நல்லறிவு பெறாதவர்களிடத்தில் இருக்காது. அப்படி இல்லையென்றால் அவர்கள் மக்கள் ஆகமாட்டார்கள். வடிவமே அடையாளமாகாது இருந்தபடியே இருக்கின்ற தன்மை மக்கள இனத் திற்கு ஒவ்வாததாகும். ஊக்கம் எவ்வளவு மேம்பாட் டினை, சிறப்பினை, உயர்வினைத் தரக்கூடியது என் கின்ற கருத்தினைச் சுருக்கமாகக் கூறினார். மரத்தினைவிட இழிவாகக் கூறப்பட்ட மக்கள் எதற்குமே பயனில்லாதவர்களாவார்கள் . வடிவம் ஒன்றினைத்தான்.மக்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் வைத்திருக்கிறார்கள். வடிவம் என்கிற தோற்றம் மக்கட் பிறவி என்பதற்குத் துணையாக இருந்துவிடாது. - - ஆதலால்தான் உள்ளத்தினைச் சுட்டிக் காட்டி அங்கு வளர்கின்ற ஊக்கத்தினை அறிய வைத்து ஆறறிவு படைத்த மக்கட் பிறவியின் நுட்பமான பெருமையினை அறிவித்தார். ஆதலால் பிறப்பிலே மக்களாகப் பிறந்தவர்கள் எல்லோரும் தங்களை மக்கள். என்று கூறிக் கொள்ள உரிமை கிடையாது. அப்படி வ.-3 -