பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மக்கள் என்று கூறிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கேற்ப மனப் பண்பாட்டினை அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும். அளவுகோல் என்பதும் அதுவேயாகும் மக்களுக்கே உரிய மன உணர்ச்சி என்பது ஒன்றுண்டு. அந்த மன உணர்ச்சியே மக்கள் என்பதற்கு அளந்து காட்டும் அளவுகோலாகும். அந்த அளவுகோலினை வைத்துத்தான் மக்களை அளக் தறிதல் வேண்டும். மக்களுக்கென்றே தனிப்பட்ட அறிவும், உணர்ச்சியும், பண்பும், இவை போன்ற பிறவும் இருப்பதாகும். - கூர்மையான புத்திசாலிகள் என்று உலக வழக்கில் காம் சொல்வது உண்டு. பலர் புத்தி, கூர்மையுள்ளவர் களாகவும் இருப்பதைக் காண்கிறோம். புத்தி கூர்மை யுள்ளவர்கள் மற்றவர்களை வென்று விடுவார்கள். புத்தி கூர்மை அவ்வித ஆற்றலினைத் தரும். கூர்மை என்ற சொல் மற்றவர்களை அழிககும் என்பதைக் குறிக்கின்றது; ஆதலால்தான் புத்திக் கூர்மையுள்ள வர்கள் பலரும் வியக்குமாறு மற்றவர்களைத் தோற் கடித்து விடுவார்கள். ஆனால், அத்தகைய மக்கள் மனப் பண்பு இல்லா தவர்களாகவும் இருக்கலாம். மனப்பண்பு என்பது மக்களுக்கேயுரிய கற்குணமாகும். நற்குணங்க ளெல்லாம் ஒன்று சேர்ந்து காணப்ப்டுகின்ற நிலை யினைத்தான் பண்பு என்று கூறுகின்றோம். அத்தகைய நிலையினை மக்கட் பிறவிதான் அடைய முடியும்