பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பண்பில்லாதவர்கள் கூர்மையான புத்தி: பெற் றிருந்தாலும் மற்றவர்களுக்குப் பயன்படமாட்டார்கள். உலகத்திற்கே பயனில்லாதவர்களாகிவிடுவார்கள். பண்பில்லாத உள்ளம் படைத்த ஒருவன் கூர்மையான புத்தியைப் பெற்றிருந்தால் அதனால் அழிவுதான் ஏற்படும். கூர்மையான அறிவினைச் சிறப்பித்துக் கூறவந்த ஆசிரியர் வள்ளுவர் அரம்’ என்பதனை உதாரணமாகக் காட்டினார். அரம் மிகவும் கூர்மை யான வேலையினைச் செய்யும். திடமான பொருள் களையும் அரம் அழித்துவிடும், தூளாகச் செய்யும். சிறுகச் சிறுக மிகக் கடினமான பொருள்களையும் அரம் என்கின்ற கருவி தேய்த்து அழிக்கும். அரமும் அழிவும் - தெளிவாகக் குறிப்பிட வேண்டுமென்றால் அரம் தன்னைச் சார்ந்த பொருள்களை அழிக்கும் என்றே கூறலாம். அரம் என்றாலே அந்தச் செயல் புரியும் கருவியினைக் குறிக்கும். ஆதலினால்தான் மக்களுக் குரிய பண்பில்லாத மக்கள்பெற்றிருக்கும் கூர்மையான புத்தி அரத்திற்குச் சமம் என்று கூறப்பட்டது. எல்லா வகையான பொருள்களையும் அரம் தேய்த்து அழிக்கும். பண்பு இல்லாதவர்கள் மக்கள் என்ற பெருமைக்குரியவர்கள் அல்லர். அத்தகைய மக்க எளிடத்தில் புத்தி கூர்மை இருந்துவிட்டால் அவர்களும் அரம் செய்கின்ற வேலையினைத்தான் செய்வார்கள். மக்கள் செய்ய வேண்டிய செயல்கள்ைச் செய்ய மாட்டார்கள். காரணம், அவர்களிடம் பண்பு இல்லா மையேயாகும். இக்கருத்தினை அரம் போலும் கூர்மையர் என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பா ஒன்று கூறுகின்றது.