பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புத்திகூர்மை மட்டும் போதாது புத்திகூர்மை பெற்றிருந்தால் மட்டும் மக்கள் என்று: கூறிக் கொள்ளும் பெருமை கிடைத்துவிடாது. மக்க ளுக்கே இருக்க வேண்டிய பண்பு இருந்து, அத்துடன் இணைந்தே புத்தி கூர்மை இருத்தல் வேண்டும். அவ்வாறு பண்பு இல்லாமல் புத்திகூர்மை மட்டும். உடையவர்களை மரம்’ என்றே ஆசிரியர் குறிப் பிட்டார். சிறந்த பேரறிவு என்பது நல்ல பண்புகளைப் பெற்றிருத்தலே ஆகும். - - ஆதலால் சிறப்பான பண்பு இல்லாததால் ஆறறி வும் இல்லை என்பது கூறப்பட்டது. ஆதலால்தான் புத்தி கூர்மை இருந்தும் மரம் என்பதற்கு சமமாக அவர்கள் கூறப்பட்டார்கள். மரம்’ என்பது ஓரறிவு" பெற்ற உயிரைக் குறிக்கும், ஓரறிவு முதல் ஐந்தறிவு. வரையில் பெற்றிருக்கின்ற பிறவிகளெல்லாம் தாழ்ந்த, பிறவிகளென்றே குறிக்கப்படுகின்றன. உள்ளமிலாத பிறவிகள் ஏனென்றால், அவைகள் தாமாகவே செயல்களைச் செய்யாதவைகளாகும். அவைகளுக்கு உள்ளம். கிடையாது; நற்பண்பு இல்லை. அந்தப் பிறவிகளிலும் கடைசிப் பிறவியாக மரம் கூறப்பட்டது. அந்த கிலைமைக்குப் பண்பு இல்லாத மக்களை ஆசிரியர் கொண்டு போய் கிறுத்தினார். - * - அரம் போலும் கூர்மையரேனும்’ என்று தொடங். கப் பெற்ற குறட்பா மரம் போலும் மக்கட் பண்பில்லா தவர் என்று முடிந்தது. இக்குறட்பாவில் மரம் போன்