பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 றவர்கள் என்று குறிப்பிட வேண்டியே மரம்போல்வர் என்று அழைத்தார். - - பண்பு இல்லாத மக்களை மரமேயாவார்கள் என்று கூறியது சிந்திக்கத் தக்கதாகும். அழிவைத் தருவதே யானாலும் புத்தி கூர்மை என்பது இருப்பதால் இவர் களை போல்வர்” என்ற சொல்லினால் குறிப்பிட்டார் போலும்! . . . . . - மக்கட் பிறவி எடுத்தவர்கள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற சிறப்பு மிகவும் சிறப்பாக வற்புறுத்தப்பட்டது. மக்கள் என்பது கன்மக்கள் என் பதேயாகும். அத்தகைய பெறுதற்கரிய பிறவியில் பெற வேண்டிய பண்புகள் பற்பலவாக இருக்கின்றன. அப் பண்புகளுக்கெல்லாம் இந்த மக்கட் பிறவி உரிமை யுடையதும் ஆகும். - ஆக்கத்தையே தரவேண்டிய மானிடப் பிறவி பண்பு இல்லாததால் அழிவினைத் தரக்கூடிய பிறவியாக இருத்தல் மிகவும் கொடுமையானதாகும். ஆதலால்தான் இழிவுபடுத்தியே கூறி மரம் போல்வர் என்று சொன்னார். - நற்பணியாற்ற நற்பண்பே வேண்டும் மன உணர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்று கூறுவதெல்லாம் கற்பணிகளைச் செய்தல் வேண்டும் என்பதேயாகும். இந்த உலகம் கின்று நிலைத்து வாழ்ந்து வருவதற்குக் காரணம் நல்ல மனம் படைத்த மக்களால்தான் என்பது உலகம் கண்ட சிறந்த உண்மையுமாம். பண்பு இல்லையென்றால் மக்கள்