பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கூட்டம் மக்களாக வாழ முடியாது. மாக்களாகத்தான் இருக்க முடியும். அடிப்படையில் பண்பினை அமைத்தேதான் கல்வி, கேள்வி, அறிவு, ஞானம் என்பவைகளெல்லாம் வளர்ந்து வரவேண்டியிருக்கின்றன. அந்த அடிப்படை இல்லையென்றால் மக்கள் கூட்டம் வாழ்ந்து வருதல் இயலாது. இக்கருத்தினை நன்றாக உள்ளத்தில் அமைக்க வேண்டித்தான் புத்தி கூர்மையினையும் புறக்கணித்தார். அந்தக் கூர்மையினை அழிக்கக் கூடிய அரம்’ என்றார். அழிவைத் தரக்கூடிய பாதையில் பண்பில்லாத மக்கள் செல்லுவார்கள் என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. எனவேதான் புத்திக் கூர்மை மட்டும் பெற்றிருப்பதால் பாராட்டுக்குரியவராகி விட மாட்டார்கள். பயன்படுகின்ற மக்களே உலகில் வாழ்தல் வேண்டும். - வாழாத மக்கள் அப்பொழுதுதான் உலகமும் வளர்ந்து செழிக்கும். பயனில்லாத மக்கள் வாழ்வதாக கினைத்துக் கொண் டிருந்தாலும்வாழாதவர்களென்றே கருதப்படுவர். பயன் என்பது பண்பினால் வளர்வது ஆகும்.' ஆதலால்தான் முதன்மையாகக் கூறப்பட்டது. சொல்லும் செயலும் இணைந்திருப்பதே அறிவுடைய மக்களுக்கு அறிகுறி பாகும். அறிவில்லாத மக்கள் தமக்கும் பிறருக்கும் பயன்படமாட்டார்கள். பயன்படாதபடியினால் மக்கள் என்ற பெருமைக்கும் தகுதியில்லாதவர்களாகி விடு. கிறார்கள். -