பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் மக்கள் கூட் டத்திலிருந்துதான் வருகின்றார்கள். அப்படியிருப் பதனாலேயே பயனில்லாத மக்களை மக்கள் என்று கூறுதல் பொருந்துமா? என்று வினாவுதல் பொருத்த மானதாகும். அவர்களை மக்கள் என்று கூறுகல் கூடாது. பயனில்லாத மக்கள் என்று குறிப்பிடும் போது எச்செயலையும் அவர்கள் பயனில்லாத முறையிலேயே காட்டிக் கொள்வார்கள் என்பது பொருளாகும். - எண்ணம், சொல், செயல் என்று மனிதத் தன்மை யினைக் குறிப்பிடுதல் இயல்பாகும். இவைகள் அனைத்தும ஒருவரை உணர்த்துவது இயல்பாகும். இவைகளில் முதன்மையாக சொற்களேயாகும் என்று' குறிப்பிடலாம். சொல்லுகின்ற சொற்கள் ஒரு மனிதனை அளந்து காட்டும். அவன் எப்ப்டிப் பட்டவன் என்பதை எடுத்துரைக்கும். உள்ளத்தின் தன்மையினை எளிதில் புரிய வைப்பவை சொற்களே யாகும. - பேசுகின்ற சொற்களைப் பல வகைகளில் கனக் கிட்டுக் கூறலாம். அவைகளில் ஒரு தன்மையினைக் குறிப்பிட்டுப் பார்க்கும் பொழுது இரண்டு வகைகளில் குறித்துக் காட்டலாம். அவ்வாறு குறிப்பிட்டுப் பயனுள்ள சொற்களையே பேசுகின்ற மக்கள், பயனிலலாத சொற்களையே பேசுகின்ற மக்கள் என்று இரண்டு பாகுபாடுகள் அமைந்திருக்கின்றன. நெல்லில் கிடக்கும் பதர்களேயாவார் அறிவுடைய மக்கள் பயன் தருகின்ற சொற். களையே சொல்வார்கள். அறிவினை இழந்த மக்கள்