பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பயனில்லாத சொற்களையே பேசுவார்கள். அத்தகைய பயனிலாத சொற்களையே அடிக்கடி பேசுவார்கள்; அப்படிப் பேசுவதில் மிகுந்த விருப்பத்தையும் காட்டு வார்கள். பயனில்லாத சொற்களைப் பேசுவதில் மகிழ்ச் சியும் கொள்வார்கள். இவர்களைப்பற்றி மிகவும் விளக்கிப் பேசலாம். பயனிலாத சொற்களைப் பேசுகின்றவர்கள் அறி 'யாமையில் இருந்து வாழும் அறிவிலிகளே யாவார்கள். ஆதலால்தான் அவர்களை ஆசிரியர் வள்ளுவனார் மைக்கள் என்று பெயரிட்டு அழைக்காதீர்கள் என்று கூறுகின்றார். பிறப்பிலேயும் மக்கள், வடிவத்திலேயும் மக்கள்; ஆனால் தன்மையிலே மக்களாக இல்லை; மக்களுக்கு இருக்க வேண்டிய அறிவு அவர்களிடம் இல்லை. g - கெல் முதலிய தானிய வகைகள் மக்களுக்கு எவ் வளவு பயன்படுகின்றன என்பதை விளக்கிக் கூறத் தேவையில்லை. அப்படிப்பட்ட தானியங்கள், பதராகப் போய்விட்டால் யாருக்குமே பயனில்லை. உள்ளீடு இல்லை கிலத்தில் ஏராளமாக விளை ந் தி ருக்கும் தானியங்கள் உள்ளிடு என்கின்ற ஒன்றினைப் பெற் றிராவிட்டால், அவைகளைப் பதர் என்று கூறு கின்றோம். . அது போலவே மக்கட் பிறவியில் மக்களுக்கு இருக்கவேண்டி உள்ளீடு அறிவு என்பதாகும். . - கெல்லினை எடுத்துக் கொண்டாலும் உள்ளிடு’ என்பது அரிசியாகும். மேற்புறம் காணப்படுவது உமி என்று கூறப்படுகின்றது. அது பயனில்லாதது.