பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பயனிலாத சொற்களைப் பேசுவதில் ஆர்வம்: காட்டுவார்கள் என்பதைப் பாராட்டுவான்’ என்ற. சொல் எடுத்துக் காட்டிற்று. மக்கள் கூட்டத்தில் அத்தகையவர்களைச் சேர்த்து எண்ணக் கூடாது என்று கூறியதுடன் கிறுத்தாமல் அவர்களைப் பதர் என்று கூறும்படியும் சொன்னார். மக்களுக்குள்ளேயே பதர்கள் இருக்கின்றார்கள். பயனுள்ள சொற்களைப் பேச இயலாது பதர்கள் கிறைந்த கூட்டம் தீங்கினை விளைவிக் கும்; பயனில்லாமல் போகும். பதர் என்பதை பதடி என்ற சொல்லினால் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஒரு. நாட்டு மக்களுக்குள்ளே பதர்கள் அதிகமாகிவிட்டால் அந்த நாடு முன்னேற்றத்தையே காணாது. அறிவில்லாத மக்கள் நாட்டினை உயர்த்துதல் முடியாததாகும். ஆதலால்தான் பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்’ என்று குறட்பாவைத் தொடங்கிய ஆசிரியர் மக்கட்பதடி எனல்" என்று. முடிக்கின்றார். விரும்பிப் பேசுவர் - - பயனிலாத சொற்களையே விருப்புடன் பேசிக் கொண்டிருப்பவர்களை மக்களுக்குள்ளே கிடக்கும் பதர் கள் என்றார். அறிவில்லாதவர்களுக்குப் பயனுள்ள சொற்களைப் பேசுதல் வராது என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. வமகன் எனல்’ என்ற குறிப்பினைக் காட்டி பயனில் லாத வார்த்தைகளைப் பேசுகின்ற அவனை மகன்