பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 என்று சொல்லாதே என்றுரைத்தார். வேறு என்ன பெயரினால் அழைக்கலாம் என்று சொல்ல வந்த ஆசிரியர் அப்படிப்பட்டவனை பதர் என்றே கூற வேண்டும் என்று அழைத்தார். - r மகன் Gা কতো Gb", மக்கட் பதடி எனல்’ என்கிற குறளடிச் சொற்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள முறைமை பொருள் பொதிந்ததாகும். - மக்களில் பலர் நடைமுறைப் பழக்கத்தில் பேசுதல் என்பதை எளிதாகக் கருதுகின்றனர். அர்த்தமில்லாத சொற்களைப் பேசுகின்ற மக்கள், அப்படிப் பேசுவது குற்றம் என கினைப்பது கிடையாது. மக்களுக்கே யுரிய பெருமைக்குப் பயனிலாத சொற்களைப் பேசுவது இழுக்கு என்றும் எண்ணுவது இல்லை. ஆசிரியர் வள்ளுவனார் மக்களை அளந்து பார்க்கும் கருவியாகச்' சொல்ல வந்தவர் பேசப்படும் சொற்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்துக் கருத்தினைத் தெரிவிக்கின்றார். எதையும் பேசுதல் கூடாது, எப்பொழுதும் பேசுதல் கூடாது, பயணிலாத சொற்களைப் பேசுதல் கூடாது, என்பவை யெல்லாம் வாழ்க்கைப் பாதையில் சிந்திக்கவேண்டியவைகளாகும். குற்றமற்றவர்கள் ஒருவனுக்கு உள்ள அறிவின் திறத்தினை அவன் பேசும் சொற்கள் முன்னின்று முதன்மையாகக்காட்டும். அறிவு நிறைந்த சான்றோர்கள் மறந்துகூட பயனிலாத சொற்களைச்சொல்லமாட்டார்கள். அதுவே,அறிவுடை. மைக்கு அழகாகும். பயனுள்ள சொற்களை ஒருவர்