பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பேசுவாரேயானால் இப்படிப் பேசுபவர்.தெளிந்த அறிவு படைத்தவர் என்பது கொள்ளத்தக்கது. . அத்தகைய மக்களை :மாசறு காட்சியவர்' என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். காட்சியவர்” என்ற சிறப்பான சொல் தெளிவு பெற்ற அறிஞர்களைக் குறிக்கும். அவர்களை மேலும் சிறப்பிக்கவேண்டி மாசறு காட்சியவர் என்று கூறினார். பேசப்படுகின்ற வார்த்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பொருள் கிறைந்த சொற்கள், பொருளே இல்லாத சொற்கள், அதாவது அர்த்தமுள்ள சொற்கள், அர்த்த மற்ற சொற்கள் எனப்படுவனவாம். பொருள் தீர்ந்த சொற்கள்’ என்பதாக குறட்பா கூறும் பொருள் நீங்கிய சொற்கள் எனபதைத்தான் இது குறிக்கின்றது. அதிக மாகப் பேசுதல், அர்த்தமில்லாத சொற்களுக்கு இடம் தரும் என்பதும் உணர்த்தப்பட்டது. ஆதலால்தான் சொற்களைப் பற்றி இவ்வளவு சிறப்பாகப் பேசப் படுகின்றது. . பொருளில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் காலத்தை வீணாக்குகிறான் என்பது மட்டுமல்ல; அறி வில்லாதவன் என்பதையே காட்டிக்கொள்கிறான் என்ப தாகும். வாழ்க்கையில் காலம் என்பது மிகவும் அருமை யானதாகும். காலத்தினை வீணாக்குபவன் மனிதப் பிறவியின் மாண்பினை உணராதவனாகிறான். மறந்தும் சான்றோர் பேசுவதில்லை எனவேதான், அறிவு நிறைந்தவர்கள் மறந்தும் கூடப் பொருளில்லாத சொற்களை எக்காலத்திலும் பேசமாட்டார்கள். பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்’ என்று குறட்பா தொடங்குகின்றது.