பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 யினைப் புரிந்துகொண்டால் பற்பல நேரங்களில் அறியாமையால் ஏற்படும் மனக் குழப்பங்களும் தடுமாற்றங்களும் வராது என்பது பெறப்பட்டது. மனப்பக்குவம் எ ன் ப து மக்களுக்கென்றே ஏற்பட்ட உயரிய பண்பாகும். மனம் என்பது பொதுப் படக் கூறும்பொழுது கட்பிற்கும் பகைமைக்கும் உரிய இடமாக அமைந்துள்ளதாகும். மனத்தைப் பக்குவப் படுத்துதல் எளிதான செயல் என்று எண்ணினால் அது. மிகவும் தவறாகும். - • பலருக்குக் கற்ற கல்வி ஒரு சிறிதும் மனத்தினைப் பக்குவப்படுத்த உதவாமலும் இருக்கும். மனம் திருந்திக் குற்றங்களைச் செய்யாதிருக்க வேண்டு மென்று கற்றறிந்தவர்கள் எல்லோருமே இருப்பார்கள் என்று எண்ணுதல் கூடாது. - . . . மனம் வேறு கல்வி வேறு - இதனைச் சிந்திக்கும்பொழுது கற்றல் என்பதும் மனம் திருந்தல் என்பதும் வெவ்வேறாக வைத்துப் பார்க்க வேண்டியவர்கள் என்றே எண்ணுதல் வேண்டும். மனக் குற்றங்களை நீக்கக் கூடிய நூல் களைக் கற்றிருந்தும் மனத்தினைத் திருத்தி நல்லவர் களாக இல்லாமல் இருப்பதும் உண்டு. மனம் திருந்தாத மக்களை மாணார்' என்று ஆசிரியர் அழைக்கின்றார். மாணார்' என்பதற்குப் பகைமை எண்ணம் கொண்டவர்கள் என்னும் பொருளினை அமைத்துக் கூறலாம். நல்ல நூல்களைக் கற்றதினால் பகைமை எண்ணம் மாறிவிடும் என்று கருதுதல் கூடாது. தீய நூல்களைக் கற் றவர்கள்தான் தீமையான எண்ணங் களைக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுதல் உலக இயல்பு. - - - 動一5