பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 இருப்பது பட்டடை என்று கூறப்படுகின்ற இக் கருவியேயாகும். இக்கருவியினைத்தான் மானார்கள்’ என்று கூறப்படுகின்ற கூடாநட்பினருக்கு உவமை யாகக் கூறுகின்றார். - கூடாகட்பினரைக் குறித்துக் காட்டும்பொழுது நேராகிரந்தவர் என்ற சொற்களினால் விளக்கு கின்றார். நேர்மையில்லாத பகைவர்கள் என்பதை கேரார் என்றும் மனத்தில் நட்பு உள்ளவர்கள்போல வெளியில் கேசிப்பதால் கிரந்தவர்' என்றும் கூறு கின்றார். பட்டடை நேரா கிரந்தவர் நட்பு என்று. குறட்பா ஒன்று முடிகின்றது. பட்டடை மனம்! அப்படிப்பட்ட பகைமை உள்ளம் படைத்தவர்கள் கம்முடன் பழகினால் கமக்குத் தீமை வரக்கூடிய காலம் வரும் வரையில்தான் பழகுவார்கள் என்பது பொருளா கும். அப்படியாகிய காலமும் குறிப்பாக இடமும் வந்து விட்டால் இக் கூடா நட்பினர் நமக்கு வருகின்ற தீமைக்கு உடந்தையாக இருப்பார்கள். - சீரிடம்" என்ற ஒரு சொல்லினை அமைத்து தீமை, வரும் இடத்தைக் கண்டுகொண்டே இருப்பார்கள் என்று கூறினார். - o

பட்டடையானது பொன் முதலியவற்றைத் தாங்கிக் கொண்டு உளி முதலிய கருவிகள் அப். பொன்னை வெட்டுவதற்கு நல்ல துணையாக இருக் கின்றது. பொன்னினை அடித்து நசுக்குகின்ற கருவி அடிக்கும்பொழுது பட்டடை துணையாக கின்று அப் பொன்னினை நசுக்கி அழிக்கத் துணையாக கின்றது.