பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அதுபோலவே கூடா நட்பினர் பகைவர்கள் நம்மைத் தாக்க வருகின்றபொழுது பட்டடை போல் இருந்து நமக்குத் தீமை செய்வார்கள் என்பதாகும். ஆதலால்தான் மனம் திருந்தாத மக்களைப் பகைவர்கள் என்று கூறி பட்டடைக்கு ஒப்பானவர் என்றும் குறிப் பிட்டார். ஆதலால்தான் இவர்களை பட்டடை நேரா கிரந்தவர் நட்பு’ என்று குறளடிச் சொற்கள் கூறுகின்றன. r - சீரிடம் காணின் என்று குறட்பா தொடங்கு கின்றது. அதாவது பகைவர்கள் தீமை செய்கின்ற காலமும் இடமும் கிடைக்கும் வரையில் என்ற கருத்தினைப் புலப்படுத்தவேண்டி சீரிடம் கானின்’ என்று வைத்தார். சீரிடம் கானின் எறிதற்குப் பட்டடை-நேரா கிரந்தவர் கட்பு’ என்பதே, குறட்பாவாகும். - - பட்டடை செய்யும் பணி பொன் முதலிய பொருள்களை நசுக்கக்கூடிய கருவியின் செயலினை எறிதல் என்பதாகக் கூறினார். அப்படி அக்கருவிகள் அடிக்கின்றபொழுது பட்டடை. துணையாக கிற்கும். எனவே எறிதற்குப் பட்டடை” என்றும் அமைத்தார். பட்டடை இல்லாமல் இருக்குமே யானால் பொன முதலிய பொருள்கள் அழிந்து ஒழிகின்ற அளவுக்கு அடிக்கும் கருவிகள் தீமை செய்து விட முடியாது. - அதுபோலவே கூடா நட்பினர் நம்மைப் பகைவர் களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற கொடுந்தீமையினைச செய்யாவிட்டால் தீமை செய்ய வந்தவர்கள் அவ்வளவு