பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கொடிய எண்ணத்தினைக் கூர்மையாக்கிக் கொண்டிருப்பவர்கள் மானார்களாவர். மானார்களிடம் வணக்கத்தினைக் கண்டால் நாம் அஞ்சவும் வேண்டும். உள்ளத்தினால் ஒன்று படாதவர்கள் ஆனபடியால் அவர்கள்பால் காணப்படுகின்ற பணிவும் வணக்கமும் தீமைக்கே அறிகுறிகளாகும். - . பகைவர்களின் பணிவும் விளக்கமும் தீங்கு செய்பவர்கள் பிறர் தம்மைக் கண்டு கொள்ளாதிருக்க வணக்கமான சொற்களையே பேசுதல் உண்டு. இதனை ஆசிரியர் சொல் வணக்கம் என்று குறிப்பிடுகின்றார். x - . - அன்பு உள்ளம் படைத்தவர்களிடம் சொல் வணக்கத்தினைக் கண்டால் பாராட்டுதல் வேண்டும். ஏனெனில் அப்பழக்கம் நட்பின் உயர்வினைப் புலப்படுத்துவதாகும். ஆனால் பகைவர்களிடம் காணப்படும் சொல் வணக்கம் தீமையினையே குறியாக வைத்திருப்பதாகும். பகைவர்களை ஒன்னார் என்ற சொல் குறிப்பிட்டுக் காட்டும். - , பொதுவாக வணக்கத்திற்கும் பணிவுக்கும் மக்கள் இசைந்துவிடுதல் உண்டு. ஆதலால்தான் முன்னறி விப்பாக அத்தகைய வணக்கத்தினை, வணக்கமான சொற்களைப் பகைவர்களிடத்தே கண்டால் கம்புதல் கூடாது என்று ஆசிரியர் கூறுகின்றார். வணக்கமான சொற்கள் என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். பகை