பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வர்கள் இயல்பாக வணங்கிப் போகின்ற பழக்கத்தினை வைத்திருக்க மாட்டார்கள். இது உலக இயல்பு. அப்படி இருக்க வணக்கமான சொற்களைப் பகைவர் களிடம் காணுகின்றோமென்றால் மிகக் கொடிய தீமையினை அவர்கள் செய்வதற்காக இருக்கின்றார்கள் என்பதே பொருளாகும். வளைவது ஏன்? எக்காலத்திலேயும் கொடுமையினைச் செய்யக் கூடிய செயலினை விளைவிப்பது வில்லும் அம்பும் ஆகும். அம்பினை எய்வதற்கு வில்லே துணையாக நிற்கின்றது. வில்லானது அம்பினை வேகமாக விடுவதற்கு ன் ற க வளைக்கப்படுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அதிக வளைவாக வில் வளைக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு வேக மாக அம்பு செல்லப் போகின்றது என்பது பொருளாகும். - - வளைந்து கொடுக்கின்ற வில் ப னி ந் து போகின்றது என்பது பொருளல்ல. கன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய இடமாகும். பகைவர் களின் சொல் வணக்கமும் வில்லின் வளைவும் ஒன்றே என்பது குறிக்கப்பட்டது. வளைந்த வில் அம்பினை விடுகின்றது. பகைவர் களின் சொல் வணக்கம் நமக்குத் தீமையை உண்டாக்கு. கின்றது. பகைவர்கள் மனம் குழைந்து பேசினாலும் கம்புதல் கூடாது. வில்லை வளைக்கின்றவனுடைய எண்ணத்தினை, அவன் குறிப்பை வில்லின்மேல் வைத்துக் கூறப்படுகினறது. சொல்லினை வணக்க மாகக் காட்டுகின்றவனும் வில்லினை வளைப்பவன் எண்ணத்தினையே ஒத்திருக்கின்றான்.