பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வில்லினை வளைப்பவன் எண்ணமும் கடக்கப் போகின்ற தீமையினையே காட்டும். சொல்லினை வணக்கமாகக் காட்டுகின்ற பகைவனது எண்ணமும் தீமையினையே குறிக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட சொல் வணக்கம் பகைவர்கள் என்று கூறப்படுகின்ற ஒன்னார்களிடமிருந்து வருகின்ற காரணத்தினாலே யாகும். வில்லும் அம்பும்

சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம்-தீங்கு குறித்தமையான் - இக்குறட்பா தெளிவாகவும் விரிவாகவும் கூடா நட்பினர்களுடைய உள்ளத்தினைத் திறந்து காட் டு கி ன் ற து. எப்ப்ொழுதும் தீமையினையே செய்யும் என்பதை வில்’ என்ற ஒன்றினால் அறிகின்றோம். நன்மை, யினையும் தீமையினையும் கலந்து செய்கின்ற பழக்கம் வில்லினிடம் கிடையாது. k

ஆதலால் எக்காலத்திலேயும் கொடுமையான தீமையினைத்தான் வி ல் லி ைன வைத்திருப்பவன் செய்கின்றான். கூடாநட்பினர் என்கிற பகைவர்களும் ஏதேனும் ஒரு காலத்தில் நன்மை செய்வார்கள் என்று எண்ணுவதெல்லாம் கூடாது. எப்பொழுதுமே தீமை யினைத்தான் செய்வார்கள். ஏனெனில், அவர்கள். மனம் திருந்தாத மானார்களாகும். இக்குறிப்பினை வில் வணக்கத்தினால் ஆசிரியர் மெய்ப்பித்தார். வணக்கத்திற்குரிய சொற்கள் மட்டும் கெடுதி யினைச் செய்துவிடாது என்று எண்ணுதல் இருக்க