பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சிறந்த பொருளினை விளக்கவேண்டிய முறையில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். - வெளி வேடத்தினால் தீமை செய்கின்ற பலரினும் தவ வேடம் தாங்கிக் கொடுமை செய்கின்றவர்களை ஆசிரியர் வன்மையாகக் கண்டிக்கின்றார். தவவேடம் தாங்கியவர்களை கம்புகின்ற பழக்கம் மக்களிடையே இயல்பாக இருந்து வருகின்றது. . - அவ்வேடதாரிகளை நெருங்கவும் அவர்களுடன் பழகவும் மக்கள் பெரும்பாலும் விருப்பம் கொள்வார்கள் என்பதும் இயல்பேயாகும். நல்ல வேடம்!) ஆண், பெண், குழந்தைகள் எனப்படுகின்ற அனை வருமே தவவேடம் தாங்கியவர்களிடம் அன்புடனும் பணிவுடனும் பழகுவதுண்டு. இவ்வளவிற்கும் காரண மாக இருப்பது அந்த வேடமேயாகும். ஆதலால்தான் வெளித் தோற்றத்தினைக் கண்டு மயங்குதல் தவறு. என்று கூறுகின்ற ஆசிரியர் குறிப்பாகத் தவவேடம் தாங்கியவர்களை எடுத்துக் காட்டுகிறார். - அழுக்கு கிறைந்த மனமுள்ளவர்களும் தீய செயல் களைப் புரிவோர்களும் தவவேடத்தினைத் தாங்கிக் கொள்வதைப்பாதுகாப்பாகவும் கொண்டிருக்கின்றனர். ஆதலால் யாரையும் அவரவர்களின் செயல்களைக் கொண்டே மதித்தலும் அளவிடுதலும் வேண்டும். தோற்றத்தைக் கண்ட மாத்திரத்திலேயே நேர்மை. யானவர்கள் என்றும் கோணல் மனம் படைத்தவர்கள் என்றும் எண்ணிவிடுதல் கூடாது; பார்ப்பதற்குப் பித்தர்களைப்போல சிலர் காணப்படுவார்கள். ஆனால்,