பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அவர்கள் அறத்தினையே செய்கின்ற உண்மையான தவத்தினராகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எவ்விதமான வேடமும் இருக்காது. பார்ப்பதற்குக் கவர்ச்சியான தோற்றமும் இருக்காது. எனினும், அவர்கள் அறச் செயலைச் செய்வதனால் உயர்ந்த தவத்தினா என்று கருதப் படுதல் வேண்டும். - - கணையும் யாழிசையும் கணை என்று சொல்லப்படுகின்ற அம்பானது பார்ப்பதற்குக் கோணல் இல்லாமல் கேராகவும் ஒழுங் காகவும் இருக்கின்றது. கேராகவும் ஒழுங்காகவும் இருப்பதனால் அந்த அம்பு கேர்மையான, ஒழுங்கான செயலைத்தான் செய்கிறது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். உயிரையே கொல்கின்ற கொடிய செயலினையல்லவா அந்த அம்பு செய்கின்றது? யாழ் என்று கூறப்படுகின்ற வீணை தோற்றத்தி னால் பல கோணல்களைக் கொண்டதாய்க் காணப்படு கிறது. அதனிடம் வளைவுகள் அதிகமாக இருக் கின்றன. ஆனால் அந்த வீணை எனப்படுகின்ற'யாழ் கடுகளவேனும் கோணலான செயல்களைச் செய்வ தில்லை. அது செய்வதோ இனிமையான செயலாகும். அருமையான இசையின் பத்தினை யாழ் அளிக் கின்றது. யாழினுடைய வளைவான தோற்றத்திற்கும் இன்னிசை தருகின்ற செயலுக்கும் சம்பந்தமில்லாம லிருப்பதைக் காணுகின்றோம். v ... s .