இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளவர் கோட்டம்●
38
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 38 கவியரசர் முடியரசன்
வெந்துயரில் ஏனோ விழுந்து மடிகின்றார்?
செந்தமிழைப் பாடிச் சிறப்புறுத்த வந்தவனே!
இந்த நிலைமாற்ற ஏடெடுத்துப் பாட்டெழுது,
தென்னாட்டுப் பண்பாடு தேய்ந்தழிந்து போகாமல்
நன்பாட்டு வல்லமையால் நாகரிகப் பாட்டெழுது
பின்பாட்டுப் பாடிப் பிழைக்காதே நின்பாட்டை
முன்பாட்டாக் கொள்ள முனைந்தெழுக என்றுரைத்தான்;
தெள்ளுதமிழ்ப் பாவலன் தென்மொழியைக் கேட்டுணர்ந்து
வள்ளுவன் தாள்மலரை வாழ்த்தித் தொழுதெழுந்து
அய்யா சிறியேன்.நான் ஆணை தலைக்கொண்டேன்
உய்யா திருக்கும் உலகமினி உய்யுமென
வாய்விட்டுச் சொன்னேன் வழியும் வியர்வையினால்
பாய்விட் டெழுந்தேன் பகற்கனவு கண்டுள்ளேன்
பட்டப் பகற்பொழுதில் பாவலர்க்குத் தோன்றுமீது
நெட்டைக் கனவின் நிழல்