வள்ளவர் கோட்டம்●
59
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் , 59 e கவியரசர் முடியரசன் - == அன்பெனுமோ ருடைமைதனை அகத்திற் கொள்ளும் அவனேயிங் குயிர்வாழ்வான் என்னத் தக்கான் என்புடைய் வெற்றுடம்பே அன்பில் லானேல் எனமொழியு மினியகுறள் கற்றிருந்தும் வன்புடைய மனத்தேமாய் ஈர மற்று வாழ்கின்றோம் நடைப்பிணமாய் அந்தோ அந்தோ! என்புகன்று திருத்துவது? குறளின் மேலா இனியொருநூல் யாண்டிருந்து கண்டெடுப்போம்? மனமென்னுங் குரங்கடக்கி வரம்பு மீறும் வாயடக்கி, நினைந்தவெலாஞ் செய்து காட்டும் தினவென்னுஞ் செயலடக்கி, மயல டக்கித் திரியின்றி வாழ்பவர்க்குத் தாழ்வே யில்லை; கனவென்னும் பொழுதத்துந் தீமை யில்லை; காலமெலா முயர்வுண்டு; நன்மை யுண்டாம்: எனமொழியும் அடக்கமெனும் உடைமை தன்னை எள்ளளவும் கைக்கொள்ள நினைந்த துண்டா? எத்துரிைதான் கற்றாலும் ஒழுக்க மென்ற இலக்கணத்தைக் கல்லாதான் அறிவே யில்லான் பித்தனவன், கடையனென உலகம் பேசும்: பின்றொடர்ந்து பழிகளெலாம் அவனைச் சேரும்: முத்தனைய சிலசொல்லாற் குறளு ரைத்த மொழிப்பொருளை நமக்குடைமை யாக்கி னோமோ? பித்தளையைப் பொன்னாகக் கருதி யிங்குப் பேதுற்றோம் எதையெதையோ உடைமைஎன்றோம்.