வள்ளவர் கோட்டம்●
60
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 60 e கவியரசர் முடியரசன் தீங்கொருவன் செய்தவழிச் சினந்தெ ழுந்து சிறுமைசெயின் அவன்காண்ப தொருநாளின்பம் ஆங்கவனைப் பொறுப்பானேல் உலகி லென்றும் அழியாத புகழுக்கே உரிய னாவன்; தீங்குறளில் பொறையுடைமை என்று சொன்ன சிறப்புடைமை நமக்குடைமை யானதுண்டோ? நீங்கிடுமவ் வொருநாளை யின்பங் காண நினைக்கின்ற மடமைக்கே ஆளாய் நின்றோம். பொருளுடைமை புல்லர்க்கும் வாய்ப்பதாகும்: பூமிதனில் உடைமைக்குள் உடைமை என்னும் அருளுடைமை சான்றோர்க்கே அமைவதாகும்: அணியுடைமைக் குறளிதனை ஒதக் கேட்டும் மருளுடைமை மிகுந்தவராய்ப் பகைமை பூண்டு மாநிலத்துப் போர்வெறியே கொண்டு ழன்று செருவொழிய மனமிலராய்ச்சினந்தெ ழுந்து சிறுமைசெய நினைந்திருந்தோம் தாழ்வே கண்டோம். அளப்பரிய செல்வங்க ளுடைய ரேனும் அறிவென்னும் ஒருசெல்வம் இல்லா ராயின் வளப்பமது காணாத வறிய ராவர்; வளரறிவு பெற்றவரே எல்லாம் பெற்றார்; உளத்திலுறு குறைநீங்க மெய்ம்மை காண உதவிவரும் அவ்வறிவுச் செல்வந் தேடி விளக்கமுற நினைந்ததுண்டா? நன்றில் உய்க்க விழைந்ததுண்டா? தீதுக்கே செலுத்து கின்றோம்.