பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

67

 கவியரசர் முடியரசன்


குடும்பமும் குறளும் வையகம் உய்ய வந்ததோர் தலைமகன் பொய்யா மொழிஎனப் புகழ்பெறும் வள்ளுவன் மாந்தர் வாழும் வழியெலாத் தொகுத்துத் திந்தமிழ்ப் பாட்டால் திருக்குறள் தந்தனன், அந்திதன்னுரலை அழகிய பதிப்பில் தந்து மகிழ்ந்தோம்; தங்கத் தகட்டில் எழுதிக் களித்தோம்; ஏனைய மொழிகளில் தழுவிப் பெயர்த்துத் தலைநிமிர்ந் திருந்தோம்; ஆண்டெலாங் கடி அதன்புகழ் பாடி ஈண்டிய புகழை எய்தினோம்; ஆனால் கொஞ்சு தமிழிற் கறிய நெறிகளை நெஞ்சத் தகட்டில் நிலைபெற எழுதிலோம்: வாழ்க்கைத் துணைநூல் வள்ளுவன் தந்தும் பாழ்த்த நெறியில் படரவே விழைந்தோம்; கண்ணிலாக் குருடன் கைவிளக் கிருப்பினும் என்ன பயனை எய்துவன்? அதுபோல் அறிவிலா நம்மிடம் அருங்குறள் இருந்தும் பெறுபயன் ஒன்றும் பெற்றிலோம் கற்றிலோம்; குடும்பம் நடத்திடக் கொஞ்சமுங் கற்றிலோம் படுத்துயர் ஒன்றே பாரினில் கண்டோம்;