உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் ●

6

● கவியரசர் முடியரசன்


பதிப்புரை

தமிழர் பெருமைக்கும், பண்பாட்டிற்கும் ஏற்றங் கூறும் பழம்பெரும் நூல்கள் இரண்டு.

தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கணங்கூறும் ஒப்பற்ற நூல்.

திருக்குறள் வாழ்வியல் இலக்கியமாக அமைந்த இணையற்ற நூல்.

முன்னைப் பழைமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இருந்து வாழ்வியல் இலக்கியம் வகுத்த நூல் திருக்குறள்.

உலகில் வேறெந்த மொழியிலும், இனத்திலும் இதற்கு இணையான நூல்கள் தோன்றவில்லை. திருக் குறள் உலக மாந்தர் அனைவருக் கும் பொதுவாக அறங்கூறும் ஓர் ஒப்பற்ற நூல்.

உலக அற நூலறிஞர்கள் யாவரினும் மேலாக அறம் பற்றி நடுநிலை நின்று கூறிய பேராசான், அரசியல் அறிவும், ஆராய்ச்சி அறிவும், பொது நோக்கும் கொண்ட தமிழ்ப் பேரறிஞர் திருவள்ளுவர்.

கவியரசர் முடியரசன்... வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர்.