குற்றமும் சுற்றமும் 95 றிேஞன். அதைச் சலந்தரன் தன் தோளின் மீது எடுத் தவளவில் அஃது அவன் உடம்பைப் பிளக்கவே அவன் இறந்தொழிந்தான். இங்ஙனம் செருக்கால் அழி வுற்ருர் பலர் உளர். அழிவைத் தரும் அறுவகைக் குற்றங்களும் களைந்த ஆன்ருேரே ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர் எனப்படுவர். அவர்களே உலகில் அமரரென உயர்வுற்று வாழ்வர். இவ் இயல்பினர், தம்பால் தினை யளவு குற்றம் வரினும் அதனை அவ்வளவாகக் கருதாது பனையளவாகக் கருதுவர். அதல்ை வரும் சிறு பழிக்கும் பெருநாணம் கொள்வர். கொற்கையை ஆண்ட பாண்டியன் ஒருவன் ஐயத்தால் அந்தணன் வீட்டுக் கதவைத் தட்டிய சிறு குற்றத்திற்காகத் தானே தனது கையை வாளால் துணித்துக் கொண்டான். நீதியில் வழுவாத பாண்டியனது நீண்ட கை மீண்டும் பொற்கை யாக வளர்ந்ததன்ருே ! ஒருவனுக்கு இறுதி பயக்கும் பகை அறுவகைக் குற்றங்களே. ஆதலால் |வற்றுள் ஒரு குற்றமேனும் தன்னிடம் வாராமல் காப்பதே வாழ்வின் பயணுகக் கருத வேண்டுமென்பார் திருவள்ளுவர். குற்றம் வருதற்கு முன்னரே அதனை அறிந்து வாராமல் தடுக்கவேண்டும். அங்ஙனம் தடுக்காவிடின் சிறு நெருப்பின் முன்னர்ச் சேர்ந்த பெரிய வைக்கோற் குவையைப்போல விரைவில் கெடுவான் என்று விளம்பிஞர். ருைமுன்னர்க் காலதான் வாழ்க்கை எரிமுன்னர் வைதுறு போலக் கெடும்’ என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். ஆற்றில் வென்னம் வருதற்கு முன்னர் அனகோலி வைத்தால் அவ்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/101
Appearance