100 வள்ளுவர் சொல்லமூதம் மாகச் சிலர் சிறுமையான செயல்களைச் செய்ய முற்படுவர். செல்வச் செருக்காலும் சிலர் தகாத செயல்களே மேற் கொள்வர். ஆதலின் எந்த நிலையிலும் இழிந்த செயல் களைப் புரிய எண்ணலாகாது என்பதை வற்புறுத்த, ‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவு வினே' என்றருளிஞர் வள்ளுவர் பெருமான். மேலும், உலகில் மேன்மையடைய வேண்டும் என்று விரும்புவோர், தம் புகழ் கெடுதற்குக் காரணமான புன்மையான செயல்களைத் தவிர்தல் வேண்டும். தெளிவான அறிவுடையார், தாம் எத்துனேத் துன்புற தேர்ந்தாலும் இழிவான செயல்களைப் புரியார். புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லே ஆன்ருே சிறு பொழுதில் கழித்தொழியும் துன்பம் கருதி, எந்நாளும் அகலாத இழிதகவிற்கு ஆணாகார். அவர்கள் வினைப்பய சூல் விளையும் துன்பங்களேத் துய்த்தாக வேண்டும் என்பதை நன்குனர்வர். ஆதலின், செய்த பின்னர்த் தாமே எண்ணி இரங்கும் இழிந்த செயல்களைப் புரியா தொழிவர். ஒருகால் சிலர் துன்ப மிகுதியால் அறிவு மயங்கிச் சிறு செயல்களைப் புரிந்துவிட்டாலும் பின்ன ரேனும் அத்தகையன பண்ணுதிருத்தல் நன்று என்று அறிவுறுத்திஞர் பெருநாவலர். பருவமுதிர்ந்த பெற்ருேரும், உருவின் மிக்க கற் புடைய மனைவியும், மக்களும் ஆகிய உறவினர் உறுபசி, யால் வருந்துவராயின் தீயன பலவும் செய்தாயினும் அவரைப் புறந்தருக என்று பிறமொழி அறநூல்கள் அறி வுறுத்தும். அவ் அறவுரை தமிழருடைய தலைசிறந்த பண்பாட்டிற்கு இழுக்கை விளைப்பது என்பதை அறிந்த வள்ளுவர், - -
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/106
Appearance