பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வள்ளுவர் சொல்லமுக்கி பதாகும். மண்டபம் அமைத்தும் குளங்கள் தோண்டியும் செய்குன்றுகளைப் படைத்தும் நறுமணப் பொழில்களே வளர்த்தும் ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டுவன கொண்டும் இன்பத்தின் பொருட்டுப் பொருளைச் செலவிடுதல் வேண்டும், இங்கனம் அரசன் மூவகையாகப் பொருளை வகுத்துத் தவருமல் செலவிடுதல் அரிது. மேலும் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் முதலாக இசயல் களைத் தவருமல் புரிதலும் அரிதாகும். ஆதலின் இவை யெல்லாம் வல்லவனே நல்லரசன் என்ற கருத்தால் *வல்லது அரசு என்று குறித்தார் வள்ளுவர். வலியரால் நலிவெய்தி முறைவேண்டிய மக்கட்கும், வறுமையால் துன்புற்றுக் குறையிரந்தார்க்கும் எளிதில் காணவல்ல காட்சிக்கு எளியணுய் அரசன் இருத்தல் வேண்டும். எவரிடத்தும் இன்சொல்லே பேசும் இயல் புடையணுக வேண்டும். இவ்வியல்புகளை உடைய அரசன் ஆளும் நாட்டைச் சிறந்த நாடென உயர்ந்தோர் ஏத் துவர். இத்தகைய மன்னன் காக்கின்ற நாட்டில் பசியும் பிணியும் பகையும் இன்றிப் பல்லுயிரும் நல்லின்பம் துய்க்கும். எல்லோரும் அரசனைக் கைகூப்பித் தொழுது வாழ்த்துவர். இன்சொல்லும் ஈகையும் உடைய அரசன், நாட்டில் பெரும் புகழை நாட்டுவான். அவன் நினைத்த பொருள்கள் அனைத்தும் பெற்று இன்புற்று வாழ்வான். நாட்டை நீதி வழுவாமல் பாதுகாக்கும் அரசன் பிறப்பால் மகனேயாயினும் அவனே மக்கட்குத் தெய்வமெனப் போற்றிஞர் பொய்யில் புலவர். அரசன் நாட்டைச் செங்கேசன்மையுடன் ஆள் வதற்கு இடித்துரைக்கும் அமைச்சர்கள் இன்றியமையா தவர். அவரது அறிவுரைகளைத் தனது செவியால்