பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேல்னமும் கல்குரவுக் 59. அருஞ்செல்வமுமே பிறர்க்குப் பயன்படுவதாகும். அங் ங்ணம் மற்றவர்க்கு உதவும் செல்வமே மேன்மேலும் ஓங்கும் பெற்றியுடையதாகும். 'காக்கை கரவ கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ராச்க்கே உள' என்பதன்ருே வள்ளுவர் சொல்லமுதம் காக்கை: தனக்குக் கிடைக்கும் உணவைத் தனித்துண்ன எண்ணுது, தனது இனத்தைக் கரைந்து அழைத்து உட னிருந்து உண்ணும். அதைப்போன்று பகுத்துண்ணும் பண்புடையார்க்குச் செல்வம் செழித்தோங்கும் என்று குறித்தருளிஞர். இத்தகைய செல்வநிலைக்கு மாறுபட்டதே நல்குசவு எனப்படுவது. இதனை வறுமை, தரித்திரம், துல்வாமை; நிரப்பு என்னும் பல பெயர்களால் குறிப்பர் சான்ருேள். ஒரு பொருளும் இல்லாது வற்றி வாடிப்போன துன்பதில் யாதலின் நல்குரவிற்கு வறுமை என்ற பெயரும் வழங்க லாயிற்று. இத் துன்பநிலை ஒருவன்பால் என்றும் தரித் திருப்பதன்ருதலின் அதனைத் தரித்திரம் என்றும் குறித் தனர். ஐம்புல இன்பங்களும் துய்க்கமுடியாத துன்பநிலை யாதலின் துவ்வாமை என்றும் குறிக்கப்பட்டது. "துன் புறுாடம் துவ்வாமை என்று அடைமொழி கொடுத்தே குறிப்பிட்டார் வள்ளுவர். நல்குரவு என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் நுகரப் படுவன யாவும் இல்லாமை' என்று: பொருள் விரித்தார். எல்லாவற்றையும் நல்கும் வலிமை’ என்றும் பொருள் தரும் அச் சொல்லுக்கு இன்பம் தருவது ஒன்றும் இல்லாமை என்ற மாறுபட்ட பொருளும் அமைந்த சிறப்பு ஆராய்தற்குரியது. மங்கலமல்லாத சொல்லே மங்கலமாகக் கூறுவது தமிழ்மரபாகும். அதனை