பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oš வள்ளுவர் சொல்லமுதம் குறை காணவோ பேசவோ கூடாது. பிறருடைய சிறந்த குணங்களேயே வியந்து பாராட்ட வேண்டும். எத்தகை யார்க்கும் பணிந்த இன்சொற்களையே பகரவேண்டும். அத்தகைய பண்புடையார் உலகில் எளிதில் பெருமை அறுவர் என்ருர் குமரகுருபரர். பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் ஒறவ:கே நோற்பதொன் றுண்டு-பிறர் பிறர் சீரெல்லாம் நூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்’ என்பது அவர் காட்டும் நீதிநெறியாகும். மக்கள்பால் காணப்படும் குற்றங்கள் ஆறெனக் கூறுவர் அறிஞர். அவையாவன காமம், வெகுளி, கடும் பற்றுள்னம், மானம், உவகை, மதம் என்ற ஆறுமாம். இவற்றை வடநூலார் காமம், கோபம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பர். வரம்பு கடந்த சிற் றின்ப விருப்பே காமம் எனப்படும். ஏதேனுமோர் காரணத்தாலோ அல்லது அறியாமையிஞலோ ஒருவன் தமக்குத் தீங்கு செய்தவிடத்து உளதாகும் கோபத்தை அளவின்றிக் கொள்வது வெகுளி எனப்படும். செல் வத்தை அவசியம் செலவிடவேண்டிய செயல்களிலும் சேலவு செய்யாமல், அப்பொருளினிடத்து மிகுதியான பற்றுக் கொண்டு இறுகப் பிடிப்பது உலோபம் அல்லது கடும்பற்றுள்ளம் எனப்படும். எப்பொழுதும் தான் தாழா மல் பிறரையே தாழ்த்த வேண்டும் என்று எண்ணும்' தவருண கொள்கையே மானம் எனப்படும். இதனை வள்ளுவர் மாண் பிறந்த மானம் என வழங்குவார், மகிழத் தக்கனவல்லவற்றிற்கும் எல்லைகடந்து மகிழ்தல் உவகை எனப்படும். செல்வம், பதவி, பட்டம், அதிகாரம்,